கரூர் அருகே மணல் லாரியும், காரும் மோதிக்கொண்டதில் கேரளாவை சார்ந்த 2 பெண்கள் உள்பட மூன்று பேர் பலி

கரூர் அருகே மணல் லாரியும், காரும் மோதிக்கொண்டதில் கேரளாவை சார்ந்த 2 பெண்கள் உள்பட மூன்று பேர் பலி from youtube by Karur Boomi
featured video : உம்முசுலைம்(ரழி) வாழ்கை வரலாறு-2 - ஹுசைன் மன்பயி -ADT பிலால் நகர் ITC பெண்கள் பயான் ரமலான் 2017
featured video : 90000 பேர் பலி ! சயாம் மரண ரயில் (1942-45) ! Death Railway !
கரூர் அருகே குளித்தலையில் கார் மீது கட்டுபாட்டை இழந்த மணல் லாரி மோதி விபத்து 2 இஸ்லாமிய பெண்கள் உள்பட 3 பேர் பலி – கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு – மணல் லாரிகள் அட்டூழியத்தால் தான் இந்த தொடர் விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு.
கரூர் மாவட்டம் குளித்தலையில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெட்டவாய்த்தலையிலிருந்து மணல் குவாரியிலருந்து மணல் ஏற்றி நாமக்கல்லுக்கு சென்ற மணல் லாரி குளித்தலை வழியாக முசிறி சென்று நாமக்கல் சென்ற போது, முன்னே சென்ற மாட்டுவண்டிகளை முந்திசெல்லும் போது எதிரே வந்த கேரளாவிலிருந்து திருச்சி வழியாக நாகூர் தர்ஹாவிற்கு இறைவனை பிரார்த்திக்க சென்ற கேரளா மாநிலம் கொச்சினை சார்ந்த ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேர் காரில் கரூர் வழியாக திருச்சி நோக்கி நாகூருக்கு செல்லும் போது, மணல் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவத்தில் காரை ஒட்டிய டிரைவர் பாஸ்கர் என்பவரது தலை துண்டானது, மேலும் காரில் பயணித்த நஸிமா, ஆஷியா என்ற இரு இஸ்லாமிய பெண்கள் பலியானார்கள். இந்நிலையில் மேலும் தனுஷா (17), முகம்மது ஷரிப் (31) ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் குளித்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்த நிலையில், கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் குளித்தலை போலீஸார் சென்று மணல் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் உயிரிழந்த மூன்று பேரது உடல்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்ஹாவிற்கு ஆண்டவனை பிரார்த்தனை செய்வதற்காக சென்றவர்கள் மீது மணல் லாரி மோதி விபத்திற்குள்ளான விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல மணல் லாரிகளினால் இப்பகுதியில் விபத்துகள் தொடர்வதாக பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.